சங்கராபுரத்தில் நட்சத்திர நன்னெறி மன்றம் சார்பில் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் பேசப்பழகு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவர் எம்.காதர் தலைமை வகித்தார். தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றச் செயலர் ஆர்.ஷாநவாஸ்கான் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கற்க கசடற கலை இலக்கியக் கழக நிறுவனர் தேவ.திருவருள், இளம் பேச்சாளர்களுக்கு பேசுவதற்கான அடிப்படை பயிற்சி அளித்தார். பயிற்சிக் களத்தில் சிறப்பாக பேசிய மாணவ, மாணவிகளுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். மன்ற துணைத் தலைவர் தாஹிர்பாஷா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


