உளுந்தூர்பேட்டை அருகே பைக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (26) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல் (24). இவர்கள் இருவரும் எல்.இ.டி பல்புகள் பொருத்தும் பணிக்காக விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கு வந்தனர்.
இவர்கள் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி கடந்த 4-ஆம் தேதி புறப்பட்டனர். அப்போது பெரியசெவலை பாரதி நகர் அருகே செல்லும்போது பாலம் கட்டுவதற்காக குவிக்கப்பட்டிருந்த கற்களில் மோதி ராஜேஷ், கோகுல் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். கோகுல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் 2 போர் விமானங்கள் மோதி விபத்து!

காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்!
சேயோன் படப்பிடிப்பு போஸ்டர்!

தவெக ஆட்சி தீய சக்தி திமுகவின் ஓட்டால் இயங்குகிறது: மு.க. ஸ்டாலின் பேச்சு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
