திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இணையவழியில் பணம் செலுத்தி 1,298 பேர் விண்ணப்பம்

விழுப்புரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறையில் 5 நாள்களில் 1,298 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:43 am IST

விழுப்புரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறையில் 5 நாள்களில் 1,298 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு போன்றவை கோரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இணைய வழியாக விண்ணப்பிக்கும் முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
ஆனால், இணைய வழியாக விண்ணப்பித்தாலும், அதற்கான கட்டணங்களை நேரில் சென்று அலுவலகத்தில் செலுத்த வேண்டும். 
அதன் பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் புதிய வாகன பதிவுக் கட்டணம், சாலை வரி போன்ற கட்டணங்கள் இணைய வழியாக செலுத்தும் முறைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், வாகன பெயர் மாற்றம், தவணை ரத்து கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாற்றப்பட்டது. 
இதன்படி, இனிமேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். 
இதற்காக, உருவாக்கப்பட்டுள்ள https://parivahan.gov.in என்ற மத்திய அரசின் இணையதளத்தில் மட்டும் கட்டணங்களை செலுத்த முடியும். 
இதன் மூலமாக, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை முறை முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த புதிய முறையில், வீட்டில் இருந்தபடியே, 24 மணி நேரமும் கட்டணங்களை செலுத்த முடியும். 
இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த அக்டோபர் 1 முதல் 5-ஆம் தேதி வரை 1,298 பேர் ஓட்டுநர் உரிமம், வாகன பெயர் மாற்றம் உள்ளிட்டவை கோரி விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 485 வரை கட்டணமாக இணைய வழியாக செலுத்தப்பட்டுள்ளது என்று பாலகுருநாதன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.