ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மக்கள் தொடர்பு முகாமில் 57 பேருக்கு நலத் திட்ட உதவி

சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 57 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 57 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமுக்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் ம.தினேஷ் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்பு நலத் திட்ட தனி வட்டாட்சியர் சு.ராஜராஜன், மண்டல துணை வட்டாட்சியர் ச.ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சு.இந்திரா வரவேற்றார்.
கோட்டாட்சியர் ம.தினேஷ் 159 மனுக்களைப் பெற்றார். வருவாய்த் துறை மூலம் முதியோர் உதவித் தொகை 10 பேருக்கு ஒரு லட்சத்து 20ஆயிரமும், வீட்டுமனை ஒப்படை 12 பேருக்கு ரூ.2 லட்சத்து 
2 ஆயிரத்து 800, பட்டாமாற்றம் 17 பேருக்கும், ஸ்மார்ட் குடும்ப அட்டை 18 பேருக்கும் என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 22ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை கோட்டாட்சியர் ம.தினேஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர் அ.ராஜசேகரன், உதவி வேளாண்மை தியாகராஜன் உள்ளிட்ட அரசின் சாதனைகள் குறித்து பலரும் பேசினர்.
கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, பொதுப் பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு ராஜ்மோகன், சுகாதார மேற்பார்வையாளர் பாபு, அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் மணி, வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் ராமர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.