விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

கார் ஓட்டுநர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

கார் ஓட்டுநரை தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 9:54 am IST

கார் ஓட்டுநரை தாக்கியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். 
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலைப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் துரை (45). அதே பகுதியில் உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ராஜகோபால் மகன் சந்தோஷ் (35). இருவரும் கார் ஓட்டுநர்கள். இவர்கள் 
இருவருக்கும் தொழில் தொடர்பாக  செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது. 
அப்போது சந்தோஷ் மதுப் புட்டியால் துரையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த துரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.