செஞ்சி சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமலையில் நிகழ்வது போன்று சிங்கவரம் கிராமத்திலும் அரங்கநாத பெருமாள் 7 வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனையுடன் அரங்கநாதப் பெருமான் சூரியபிரபை வாகனத்திலும், காலை 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், காலை 10 மணிக்கு பெரிய திருவடி என்கிற கருடசேவை வாகனத்திலும், நண்பகல் 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், பிற்பகல் 1 மணிக்கு திருமஞ்சன விசேஷ அலங்காரத்திலும், பிற்பகல் 2 மணிக்கு சிறிய திருவடி என்கிற அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஅரங்கநாத பெருமாள் அருள்பாலித்தார்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
கர ஓடிடி தேதி அறிவிப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


