பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் விழுப்புரம் மாவட்டத்தில் 7 இடங்களில் தனி அறைகளில் வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச்
1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வுகள் தொடங்க சில நாள்களே உள்ளதால், வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பாக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிளஸ் 2 வினாத்தாள்கள் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட 7 இடங்களில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி கூறியாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 20,068 மாணவர்களும், 21,003 மாணவிகளும் என மொத்தம் 41,071 பேர் இந்தாண்டு நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுத உள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு வினாத்தாள்கள் 2 நாள்களுக்கு முன்பே விழுப்புரத்துக்கு வந்துவிட்டன.
விழுப்புரத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், திண்டிவனத்தில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திலும், செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கள்ளக்குறிச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், சங்கராபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!
அகம் மகிழும் என் அல்லிக்குளம்... கவனம் பெறும் தீ பாடல்!

எஸ்பிஐ வங்கி தொடர்ந்து 6 நாள்கள் மூடப்படலாம்! காரணம் அறிய...

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தகுதி நீக்கம்: அதிமுக இன்பதுரை எம்.பி
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
