சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

"மாணவர்கள் வாழ்வில் முன்னேற கடின உழைப்பு அவசியம்'

மாணவர்கள் வாழ்வில் முன்னேற கடின உழைப்பு அவசியம் என தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சுதீந்திரநாத் பாண்டா  கூறினார். 

Updated On :25 பிப்ரவரி 2019, 9:42 am IST

மாணவர்கள் வாழ்வில் முன்னேற கடின உழைப்பு அவசியம் என தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சுதீந்திரநாத் பாண்டா  கூறினார். 
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின்  மாணவ, மாணவிகளுக்கான 2018-ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு  விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு, அண்ணா 
பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் சுதீந்திரநாத் பாண்டா கலந்துகொண்டு 1,092 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: 
மாணவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது பொறியியல் துறை தொடர்பான வேலைவாய்ப்புகள் 
அதிகமாக உள்ளன. இந்த வாய்ப்புகளை பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பயிற்சி
களை அளித்து வருகின்றன. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்வில் முன்னேற கடின உழைப்பு, ஈடுபாடு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை முக்கியம் என்றார் அவர்.  விழாவில், விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 215 மாணவ, மாணவிகளும், ஆரணி அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 193 மாணவ, மாணவிகளும், காஞ்சிபுரம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 220 மாணவ, மாணவிகளும், திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 199 மாணவ, மாணவிகளும், பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 265 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,092 பேர் பட்டம் பெற்றனர். மேலும், பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் தேர்ச்சி பெற்ற 9 மாணவ, மாணவிகள் பதக்கங்களையும் பெற்றனர்.
முன்னதாக விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில் வரவேற்றார். தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், ஞானமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். விழாவில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன், உறுப்பு பொறியியல் கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.