புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்த இளைஞரை திண்டிவனம் அருகே கிளியனூரில் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிளியனூர் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, புதுச்சேரியிலிருந்து வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, சோதனையிட்டனர். அதில், சுமார் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 191 மதுப் புட்டிகள் இருந்தன.
இது தொடர்பாக காரில் இருந்த நபரிடம் விசாரித்ததில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஏனத்தூரைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தோஷ் (27) என்பதும், புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு மதுப்புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து, மதுப் புட்டிகளுடன் காரை கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


