சங்கராபுரத்தில் சங்கைத் தமிழ்ச் சங்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம் ஆகியவை சார்பில், இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மு.கலைச்செழியன், ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் பெ.சயராமன், ஓய்வு பெற்ற நில அளவையர் நா.சின்னசாமி, ஆசிரியை இரா.சவரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்கச் செயலர் ச.சாதிக்பாட்ஷா
வரவேற்றார்.
ஆசிரியை பெ.கலைச்செல்வி குறள் விளக்கம் அளித்தார். தமிழ்ச் சங்கக் காப்பாளர் ஆ.இலட்சுமிபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பாவேந்தரும் - தமிழும் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தமிழ்வேந்தன் எழில், நாகசாமியும் - திருக்குறளும் என்ற தலைப்பில் தமிழ்வழிக் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அ.சி.சின்னப்பதமிழர், பாவேந்தரும் - பெரியாரும் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.அறிவழகன் ஆகியோர் பேசினர்.
தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன், கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலர் செ.வ.மதிவாணன், தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், மருத்துவர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்ச் சங்கப் பொருளாளர் தி.கோ.நரசிம்மன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








