கள்ளக்குறிச்சி திருவள்ளுவர் பல்கலைக்கழக (உறுப்பு) கலை, அறிவியல் கல்லூரியில் 2019 - 20ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை (மே 27) தொடங்குகிறது.
இந்தக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கனிணி அறிவியல், கணிதம் உள்ளிட்ட 7 பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவுகளுக்கு கடந்த 1-ஆம் தேதியிலிருந்து மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர்.
இந்த நிலையில், மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (மே 27) தொடங்குகிறது. அன்றைய தினம் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு காலை 10 மணி முதல் 11 மணி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
11 மணிக்கு மேல் இளநிலை அறிவியல் பாடங்களுக்கும், செவ்வாய்க்கிழமை (மே 28) வணிகவியல் பிரிவுக்கும், புதன்கிழமை ( மே 29) இளநிலை தமிழ் பிரிவுக்கும், வியாழக்கிழமை (மே 30) இளநிலை ஆங்கிலம் பிரிவுக்கும், வெள்ளிக்கிழமை ( மே 31) நேரடி சேர்க்கையும் (வராண்டா) நடைபெறுகின்றன என அந்தக் கல்லூரி முதல்வர் மு.முத்துசாமி தெரிவித்தார். மேலும், இளநிலை கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் 10 நாள்களுக்கு முன்பே அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கல்லூரியின் முதல்வர் மு.முத்துசாமி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







