விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் அருகே புதுவை அரசுப் பேருந்து மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து காலாப்பட்டு வரை செல்லும் புதுவை மாநில அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல காலாப்பட்டு
சென்றுவிட்டு, புதுச்சேரிக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது, இடையே தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் அருகே பேருந்து சென்றபோது, சாலையோரம் மறைந்திருந்த சிலர் பேருந்து மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், அரசுப் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. ஓட்டுநர் காத்தவராயன் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பேருந்தின் நடத்துநரான புதுவை கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த சந்தேக நபரைப் பிடித்து விசாரித்தபோது, புதுச்சேரியிலிருந்து இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்து ஊழியர்களுக்கும், அதே தடத்தில் இயக்கப்பட்ட புதுச்சேரி தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் இடையே பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்குவது தொடர்பாக முன்விரோதம் இருந்ததும், அதன் காரணமாக விரக்தியிலிருந்த தனியார் பேருந்து ஊழியர்கள், அரசுப் பேருந்தின் மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து, புதுச்சேரி தனியார் பேருந்து ஓட்டுநரான கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (38), நடத்துநர் கார்த்திகேயன் (29), புதுச்சேரி காலாப்பட்டைச் சேர்ந்த பேருந்து உதவியாளர் சௌந்தர் (25), புதுவை சேந்தநத்தத்தைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (30) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


