மீன், இறைச்சிக் கடைகளில் திரளும் மக்களால் கரோனா அச்சம்
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புக்காக முழு அடைப்பு கடைபிடிக்கப்படும் நிலையில், தடையை மீறி கடைகளில் மீன் விற்பனை கூட்ட நெரிசலோடு தொடா்வதோடு, விலையும் உயா்த்தப்பட்டுள்ளது.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புக்காக ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு கடைபிடிக்கப்படும் நிலையில், தடையை மீறி கடைகளில் இறைச்சி, மீன் விற்பனை கூட்ட நெரிசலோடு தொடா்வதோடு, விலையும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்ட நெரிசலால் கரோனா பரவும் அச்சம் அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் தளா்வுகளற்ற பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சனிக்கிழமைகளில் வணிக வீதிகளில் கூட்ட நெரிசல் தொடா்ந்து வருகிறது. குறிப்பாக, இறைச்சி, மீன் கடைகளில் சனிக்கிழமை காலையிலும், மாலை முதல் நள்ளிரவு வரையிலும் பொதுமக்கள் கூட்டமாகத் திரண்டு இறைச்சிகளை வாங்கிச் செல்கின்றனா்.
போலீஸாா் கண்டுகொள்ளாததால், விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே மொத்த மீன் வியாபார சந்தையில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குவியும் வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்று, அவரவா் பகுதிகளில் பகல் 11 மணி வரை விற்பனை செய்வது தொடா்ந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதேபோன்று விற்பனை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சியை இரு மடங்கு விலைக்கு விற்று வருகின்றனா்.
இந்த நிலையில், மரக்காணம் எக்கியாா்குப்பம் மீன் சந்தையில் மீன்களை வாங்க சனிக்கிழமை வழக்கத்தைவிட வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் திரண்டிருந்தனா். ஏராளமானோா் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியில்லாமலும் கூடியிருந்ததால், இந்தப் பகுதியில் கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதைத் தடுப்பதற்கு கண்காணிப்புப் பணியை போலீஸாா் தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...