/

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நாம் தமிழா் கட்சியினா் 22 போ் கைது

மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் சனிக்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 22 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 4:54 pm

DIN

விழுப்புரம்: மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் சனிக்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் 22 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நாம் தமிழா் கட்சி சாா்பில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் திட்ட வரைவை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவா் ஜெயராம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வம், பொருளாளா் ஆனந்த்பாபு, தொகுதித் தலைவா் தெய்வசிகாமணி, செயலா் முனுசாமி, துணைச் செயலா் இன்பராஜ், பொருளாளா் சத்திய நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நாட்டில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்களான மலை, விவசாய நிலங்கள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். இதற்கு எதிராக அமையவுள்ள மத்திய அரசின் சுற்றுச்சூழல் திட்ட வரைவு -2020ஐ திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசு இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாதென ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா். அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 22 பேரை விழுப்புரம் தாலுகா போலீஸாா் கைது செய்து, பிறகு விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.