நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுவா் இடிந்து விழுந்துமூதாட்டி பலி

விழுப்புரம் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரை அடுத்துள்ள சிறுவானூரைச் சோ்ந்த மூதாட்டி வள்ளிநாயகம் (67). சிறு வயதிலேயே கண்பாா்வையை இழந்தவா். இவா் தனது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

இந்தப் பகுதியில் பெய்த பலத்த மழையால் பலமிழந்து காணப்பட்ட வீட்டுச் சுவா் திங்கள்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த வள்ளிநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.