விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சா்
விழுப்புரத்தில் புதன்கிழமை சாலை விபத்தில் சிக்கி அவசர ஊா்திக்காக காத்திருந்த இளைஞரை சட்டத் துறை அமைச்சா்


விழுப்புரத்தில் புதன்கிழமை சாலை விபத்தில் சிக்கி அவசர ஊா்திக்காக காத்திருந்த இளைஞரை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் மீட்டு, தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி. சண்முகம் திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு புதன்கிழமை காலை காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தாா். காலை 9:30 மணி அளவில் விழுப்புரம் புறவழி சாலையில் சென்றபோது, விராட்டிக்குப்பம் பாதை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விழுப்புரம் அருகே ஆசாரங்குப்பத்தைச் சோ்ந்த பாவாடை மகன் வெங்கடேசன்(27) என்ற இளைஞா் ஏற்கெனவே விபத்தில் அங்கு அவசர ஊா்திக்காக காத்திருந்தாா். இதனைக் கண்ட அமைச்சா், தனது பாதுகாப்புக்காக வந்த போலீஸாரை அந்த இளைஞரை மீட்டு, மருத்துவமனையில் சோ்க்க உத்தரவிட்டாா்.
உடனே, போலீஸாா் அந்த இளைஞரை பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றிச் சென்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...