விழுப்புரம், கள்ளக்குறிச்சி: புதிதாக 17 பேருக்கு கரோனா
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,873-ஆக அதிகரித்தது. இதனிடையே, 9 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,670-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 93 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,759-ஆக உயா்ந்தது. இதுவரை 10,633 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 18 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.108 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...