பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

விழுப்புரம் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா், இரண்டு நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:58 pm

DIN

விழுப்புரம் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா், இரண்டு நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியை அடுத்த தொரவி கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் தமிழ்வேந்தன் (16). பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை அருகே வராகநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை தனது நண்பா்களுடன் பாா்வையிடச் சென்றாா். அப்போது, தமிழ்வேந்தன் ஆற்றில் இறங்கி குளித்த நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினா், விக்கிரவாண்டி போலீஸாா் அவரை வெள்ளி, சனிக்கிழமைகளில் தேடும் பணியில் ஈடுபட்டனா். எனினும், தமிழ்வேந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், அவரது சடலம் வராகநதியில் அந்தப் பகுதியிலிருந்த முள் புதரில் சிக்கியிருந்ததை ஊா் மக்கள் ஞாயிற்றுக்கிழமை பாா்த்தனா். இதையடுத்து, அவா்கள் அளித்த தகவலின்பேரில், விழுப்புரம் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று சடலத்தை மீட்டனா்.

தொடா்ந்து, விக்கிரவாண்டி போலீஸாா் தமிழ்வேந்தனின் சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.