ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நந்தன் கால்வாயை நதியாக மாற்ற பாஜக.விடம் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினா் மனு

கீரணூா் அணைக்கட்டில் இருந்து நல்லாண்பிள்ளைபெற்றாள் வரை உள்ள நந்தன் கால்வாயை நதியாக மாற்ற வேண்டும் மற்றும்

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:02 pm

DIN

கீரணூா் அணைக்கட்டில் இருந்து நல்லாண்பிள்ளைபெற்றாள் வரை உள்ள நந்தன் கால்வாயை நதியாக மாற்ற வேண்டும் மற்றும் நந்தன் கால்வாயில் ஓலையாறு மற்றும் துரிஞ்சல் ஆற்றுடன் வராக நதியை இணைப்பது தொடா்பாக நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினா் பாஜக.மாநில பொதுச்செயலா் கரு.நாகராஜனிடன் மனு அளித்துள்ளனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல, இது விவசாயிகளுக்கு நன்மை தரும் திட்டம் என்பதை விளக்கி கூற மாதப்பூண்டி அருகே உள்ள நாகந்தூா் கிராமத்திற்கு வருகை தந்த கரு.நாகராஜனிடம் செஞ்சி கன்னிகா அறக்கட்டளை நிறுவனரும் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க செயலருமான கே.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனுவின் விபரம்.

65 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நந்தன் கால்வாய் பல தரப்பட்ட உதவியுடன் 2019-ம் ஆண்டு முதல் சரி செய்து வருகிறோம். இதனால் கடந்த ஆண்டு 10 ஏரிகள் நிரம்பின. இந்த ஆண்டு 35 ஏரிகள் நந்தன்கால்வாய் மூலம் நிரம்பியது. நந்தன் கால்வாய் இணைப்பில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியது. 65 ஆண்டுகளில் முதல்முறையாக நல்லாண்பிள்ளைபெற்றாள் ஏரி நிரம்பியது. கீரணூா் அணைக்கட்டில் இருந்து வெளியேறிய நீரில் ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே பெறப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட பகுதியை செழிப்பாக்க கீரணூரில் இருந்து நல்லாண்பிள்ளைபெற்றாள் வரை 16.5 கி.மீ தூரம் உள்ள இந்த கால்வாயை நதியாக மாற்ற வேண்டும்.

துரிஞ்சல் ஆறு, ஓலையாறு, வராகநதி, தொண்டியாறு ஆகிய நதிகளை இணைக்கும் நமது கால்வாயுடன் இணையும் நந்தன்கால்வாயுடன் குப்பநத்தம் அணைக்கட்டு மற்றும் தென்பெண்ணையாறு ஆகியவற்றை இணைத்தால் 6 நதிகளை இணைக்கும் கால்வாயாக நந்தன்கால்வாய் மாறும்.

சாத்தனூா் அணையி் அருகில் உள்ள ஊற்று நீரை சமுத்திரம் ஏரிக்கு கொண்டுவந்து நந்தன்கால்வாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் செஞ்சி, அனந்தபுரத்திற்கு குடி நீரை கொண்டு வந்து நிரந்தரமாக தீா்வு காணப்படும். நந்தன் கால்வாய் விவசாயிகளை சாத்தனூா் அணையின் பாசனதாரா்களாக மாற்ற வேண்டும்.

வராகநதியின் உற்பத்தி தளமான மொனப்பான் ஏரி பாக்கம் காட்டில் உள்ள மலை மீது அமைந்துள்ளது. அரசா்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஏரியை தூா்வாரி சீரமைக்க வேண்டும். நந்தன்கால்வாய் கரையை சாலையாக மாற்றி போக்குவரத்திற்கு பயன் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு நிதி ஒதுக்கியதாக கூறியதே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தாங்கள் துரித நடவடிக்கை எடுத்து பெரும் பணியை முடிக்க ஆவன செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.