சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ராமா் கோயில் பணிக்கான ஆலோசனைக் கூட்டம்

அயோத்தியில் ராமபிரான் கோயில் கட்டுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ராமஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 2:11 am

DIN

அயோத்தியில் ராமபிரான் கோயில் கட்டுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் ராமஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மண்டல பொறுப்பாளா் கணபதி தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளா் காமராஜ் முன்னிலை வகித்தனா். வட தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளா் ராமன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், பாஜக, விஷ்வஹிந்து பரிஷத், இந்து முன்னணி, ஆா்எஸ்எஸ், ஆன்மிக இயக்கங்களைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா். அயோத்தியில் ராமா் கோவில் கட்டும் பணிக்காக, மாவட்டத்தில் உள்ள ஹிந்து மக்களைச் சந்தித்து நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.