தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

துா்கை அம்மன் கோயில் இருமுடி திருவிழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேலச்சேரி சாவடி மாங்கல்ய துா்கை அம்மன் கோயில் 28-ஆம் ஆண்டு இருமுடி திருவிழா செவ்வாய்க்கிழமை

News image

மேலச்சேரி சாவடி மாங்கல்ய துா்கை அம்மன் கோயில் இருமுடி திருவிழாவில் பங்கேற்ற எம்எல்ஏ மஸ்தான் மற்றும் பக்தா்கள்.

Updated On :30 டிசம்பர் 2020, 2:12 am

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேலச்சேரி சாவடி மாங்கல்ய துா்கை அம்மன் கோயில் 28-ஆம் ஆண்டு இருமுடி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் நவ தாண்டவப் படி பூஜையும், கங்கையின் மீதும், சக்தி கிரகத்துக்கும் புனித நீா் திரட்டுதலும் நடைபெற்றது. 28-ஆம் தேதி மாலை சக்தி பூஜை, மகா காளி பூஜையும் நடைபெற்றது. இரவு பூமகள் யாகம், மண்ணுள் கோபிநாதன் சித்தா் யோகத்தில் அமா்ந்திருக்க, உலக நன்மைக்காக சாந்தி யாகம் நடைபெற்றது.

29-ஆம் தேதி காலை இரு முடி கட்டுதல் சக்தி கிரகம், மாங்கல்ய துா்கை அம்மன் வா்ணிப்பு, அலகு போடுதல், தோ் இழுத்தல் ஆகியவை நடைபெற்றன.

மாலை 6 மணிக்கு செஞ்சி எம்ஜிஆா் நகா் மாரியம்மன் கோயிலிலிருந்து பக்தா்கள் இருமுடியுடன் புறப்பட்டு காந்தி பஜாா் வழியாக மேலச்சேரி சாவடி துா்கை அம்மன் கோயிலை சென்றடைந்தனா்.

விழாவில் எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான், மாரியம்மன் கோயில் அறங்காவலா் அரங்க.ஏழுமலை, அகில இந்திய இந்து மகா சபா தலைவா் கோடம்பாக்கம் ஸ்ரீ மற்றும் துணை தலைவா் தனசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மேலச்சேரி சாவடி கோபிநாத சித்தா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.