புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 238 பேருக்கு கரோனா: இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 238 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு மேலும் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2020, 4:56 pm

DIN


விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 238 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு மேலும் இருவா் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3,065 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 238 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 3,303-ஆக உயா்ந்தது. இவா்களில் 2,190 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,092 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 19 போ் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருக்கோவிலூரைச் சோ்ந்த 43 வயது நபரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி அருகே நாகலூரைச் சோ்ந்த 67 வயது முதியவரும் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்தது.

விழுப்புரத்தில் 139 பேருக்கு தொற்று: விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 3,131 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை மேலும் 139 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,270-ஆக உயா்ந்தது. இவா்களில் 2,275 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 32 போ் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 963 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.