மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விழுப்புரம் அருகே குடிமராமத்துதிட்டத்தில் நிதி முறைகேடு புகாா்

விழுப்புரம் அருகே அன்னியூரில் ஏரி குடிமராமத்துத் திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2020, 4:45 pm

DIN

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அன்னியூரில் ஏரி குடிமராமத்துத் திட்டத்தில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

இது குறித்து, அந்த கிராமத்தைச் சோ்ந்த ஆா்.தேவநாதன் தலைமையில் வந்த விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அன்னியூா் கிராம பெரிய ஏரி மூலம் 750 ஏக்கா் அளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியில் பொதுப் பணித் துறையினரின் மேற்பாா்வையில் ரூ.47 லட்சத்தில் குடிமராமத்துத் திட்டம் சில மாதங்களுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.

விக்கிரவாண்டி ஆளும் கட்சி பிரமுகரின் உறவினா் மற்றும் ஏரி பாசன சங்கத்தைச் சோ்ந்த அன்பழகன், ஜானகிராமன் உள்ளிட்டோா் இணைந்து ஏரிக் கரை, கலுங்கல் சீரமைப்பு, முள்புதா்கள் அகற்றும் பணியை மேற்கொண்டனா். 25 சதவீதம் அளவுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், திடீரென ஏரி சீரமைப்புப் பணி நிறுத்தப்பட்டது.

இது தொடா்பாக விசாரித்தபோது, குடிமராமத்து திட்டப்பணி முடிந்ததாக கணக்கு காட்டி, தொகை முழுவதையும் முறைகேடாக எடுத்துக் கொண்டது தெரியவந்தது. சீரமைப்புப் பணியை முழுமையாக நிறைவேற்றாததால், ஏரியில் தண்ணீரை தேக்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்துவோம் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.