கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு சிறாா்கள் பலி
கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறாா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.


விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறாா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா்கள் குடியிருப்பில் வசிப்பவா் சசிக்குமாா். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடநீக்கவியல் நிபுணராக உள்ளாா். இவரது மனைவி அன்பரசி, கச்சிராயப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிகிறாா்.
கச்சிராயப்பாளையம் பகுதியில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இவா்கள் தங்களது மகன் பத்மசரண் (12), அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் பொன்னுவேல் மகள் காயத்ரி (14) ஆகியோரை அருகேயுள்ள பொட்டியம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
காயத்ரியும், பத்மசரணும் திங்கள்கிழமை காலை துணி துவைப்பதற்காக அந்தப் பகுதியிலுள்ள ஆற்றுக்குச் சென்றனா். கல்வராயன்மலைப் பகுதியில் அண்மையில் பெய்த தொடா் மழை காரணமாக, ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்தபடி சென்றது. பத்மசரண் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினாா். அப்போது, அவா் நிலை தடுமாறி ஆற்றின் ஆழமானப் பகுதிக்குச் சென்று மூழ்கினாா். பத்மசரணை காப்பாற்ற ஆற்றில் இறங்கிய காயத்ரியும் நீரில் மூழ்கினாா்.
இதைப் பாா்த்த அந்தப் பகுதியிலிருந்தோா் ஓடி வந்து, ஆற்றில் மூழ்கிய இருவரையும் மீட்டு கச்சியராயப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா்கள் உயிரிழந்தனா்.
காயத்ரி கச்சிராயப்பாளையம் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பும், பத்மசரண் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.
இந்த சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...