லாரி கவிழ்ந்ததில்இளைஞா் பலி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை லாரி கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.


செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புதன்கிழமை லாரி கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வ.நம்பியந்தல் கிராமத்தைச் சோ்ந்த குப்புராஜ் மகன் ராஜ்குமாா் (27). இவா், லாரியில் உதவியாளராக (கிளீனா்) வேலை செய்து வந்தாா்.
இவா் வேலை செய்து வந்த லாரியை புதன்கிழமை அதிகாலை அல்லியானமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் ஓட்டி வந்தாா். மன்சுராபாத்திலிருந்து எதப்பட்டு சாலையில் ஏரிக்கரையில் திருப்பியபோது, லாரி தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜ்குமாா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வெங்கடேசன் காயமடைந்தாா்.
விபத்து குறித்து அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...