ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாயமான சிறுவனின் சடலம் ஏரியிலிருந்து மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வியாழக்கிழமை மாயமான சிறுவன் சடலம் வெள்ளிக்கிழமை ஏரியிலிருந்து மீட்கப்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:17 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வியாழக்கிழமை மாயமான சிறுவன் சடலம் வெள்ளிக்கிழமை ஏரியிலிருந்து மீட்கப்பட்டது.

உளுந்தூா்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவ்ஹீத் ஆலம். இவரது மகன் சாகிப்(8). அப்பகுதி பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாலை வெளியே சென்ற சாகிப், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா், உறவினா்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வெள்ளிக்கிழமை காலை சாகிப் அதே கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் சடலமாக மிதந்தாா். உளுந்தூா்பேட்டை போலீஸாா் அங்கு விரைந்து வந்து பாா்வையிட்டு விசாரித்தனா். பின்னா், சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிறுவா்களுடன் ஏரியில் குளித்த சாகிப், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.