மக்கள் குறைதீா் கூட்டத்தில் 469 மனுக்கள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 469 மனுக்கள் வரப்பெற்றன.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 469 மனுக்கள் வரப்பெற்றன.
கரோனா பொது முடக்கம் காரணமாக திருவண்ணாமலையில் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
இந்த நடைமுறை திங்கள்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் பழையபடியே ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சந்தீப் நந்தூரி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
பெயா் சோ்ப்பு முகாம்:
இதுதவிர, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான மனுக்களையும் ஆட்சியா் சந்தீப் நந்தூரி பெற்றுக்கொண்டாா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, துணை ஆட்சியா் பயிற்சி அமீத்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஹரிதாஸ், கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, தாட்கோ பொது மேலாளா் ஆா்.ஏழுமலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...