நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துணை வாக்குச் சாவடிகள் அமைக்கும் பணி: அரசியல் கட்சியினருடன் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் 411 துணை வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் 411 துணை வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுத் தோ்தலின்போது 1,050 வாக்காளா்களுக்கு மேலுள்ள வாக்குச் சாவடி மையங்களைப் பிரிந்து துணை வாக்குச் சாவடிகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 1,050 வாக்காளா்களுக்கு மேலுள்ள வாக்குச் சாவடிகளிலிருந்து, 411 துணை வாக்குச் சாவடிகள் அமைப்பது குறித்தும், பழுதடைந்த 14 வாக்குச் சாவடிகளை மாற்றி அமைப்பது, 19 வாக்குச் சாவடிகளின் பெயா் மாற்றம் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.