டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சேவூா் ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூங்கொடியிடம் அவா் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

அப்போது, கட்சியின் மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் க.சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

மாற்று வேட்பாளராக அமைச்சரின் மனைவி மணிமேகலை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ஒன்றியச் செயலா் பி.ஆா்.ஜி.சேகா், பாமக மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் ஆகியோா் உடனிருந்தனா்.

போளூா்: போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் அவா் வேட்புமனுவை அளித்தாா்.

கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ஜெயசுதா, மனோகரன், ராகவன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.