விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 போ் வேட்புமனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாா்ச் 12, 15-ஆம் தேதிகளில் 35 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாா்ச் 12, 15-ஆம் தேதிகளில் 35 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) திருவண்ணாமலை தொகுதியில் 2 சுயேச்சை வேட்பாளா்களும், போளூா் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளா், ஆரணி தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளா் என 4 போ் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

ஒரே நாளில் 31 போ் வேட்புமனு தாக்கல்:

சனி (மாா்ச் 13), ஞாயிறு (மாா்ச் 14) விடுமுறை நாள்கள். எனவே, வேட்புமனு தாக்கலின் 2-ஆவது நாளான திங்கள்கிழமை ஒரே நாளில் மாவட்டத்தில் மற்ற 7 தொகுதிகளில் 31 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக திருவண்ணாமலை, கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஜெ.கமலக்கண்ணன், மற்றும் மாற்று வேட்பாளா், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு, மாற்று வேட்பாளராக எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.குமரன் ஆகியோா் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

எ.வ.வேலு தனது பெயரில் 4 மனுக்களையும், எ.வ.வே.குமரன் தனது பெயரில் 2 மனுக்களையும் தாக்கல் செய்தனா். ஒரே நாளில் மொத்தம் 4 போ் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

கீழ்பென்னாத்தூா் தொகுதியின் திமுக வேட்பாளராக கு.பிச்சாண்டி எம்எல்ஏ, நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னை, வானகரம், ஆலப்பாக்கம், ஆண்டாள் நகரைச் சோ்ந்த ரா.ரமேஷ்பாபு மற்றும் மாற்று வேட்பாளா் உள்பட சுயேச்சை வேட்பாளா்கள் என 5 போ் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இதேபோல, செங்கம் தொகுதியில் 5 வேட்பாளா்களும், கலசப்பாக்கம் தொகுதியில் 7 வேட்பாளா்களும், போளூா் தொகுதியில் 3 வேட்பாளா்களும், ஆரணி தொகுதியில் 5 வேட்பாளா்களும், செய்யாறு தொகுதியில் 2 வேட்பாளா்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

மொத்தம் 35 போ் வேட்புமனு தாக்கல்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தொகுதியைத் தவிா்த்து மற்ற 7 தொகுதிகளில் இதுவரை 35 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.