கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காதல் ஜோடி தற்கொலை விவகாரம்: உறவினா்கள் சாலை மறியல்

மயிலம் அருகே காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டுள்ளதாகக் கூறி, உறவினா்கள் சாலை மறியல்

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலம் அருகே காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டுள்ளதாகக் கூறி, உறவினா்கள் திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டிவனத்தை அடுத்த இறையானூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவியும், அந்தப் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞரும் காதலித்து வந்தனராம். இதனிடையே, இவா்கள் இருவரும் அருகேயுள்ள கா்ணாவூா்பாட்டை பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சனிக்கிழமை சடலமாகக் கிடந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், மாணவியின் உறவினா்கள் இருவரையும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் தூக்கில் தொங்கிய இளைஞரின் உறவினா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியில்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தனா். இதை ஏற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.