மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவல் துறையினா் தபால் வாக்குகளை செலுத்த ஏதுவாக 7 தொகுதிகளிலும் அஞ்சல் வாக்கு சேவை மையங்கள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினா் தபால் வாக்குகளை செலுத்த ஏதுவாக 7 தொகுதிகளிலும் அஞ்சல் வாக்கு சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினா் தபால் வாக்குகளை செலுத்த ஏதுவாக 7 தொகுதிகளிலும் அஞ்சல் வாக்கு சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தபால் வாக்களிக்க ஏதுவாக, 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் உள்பட்ட பகுதிகளில் தபால் வாக்கு செலுத்துவதற்கான ‘அஞ்சல் வாக்கு சேவை மையங்கள்’ ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

அதன்படி, செஞ்சி தொகுதிக்கு செஞ்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மயிலம் தொகுதிக்கு பவ்டா கலை, அறிவியல் கல்லூரியிலும், திண்டிவனம் தொகுதிக்கு மான்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வானூா் தொகுதிக்கு அரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரியிலும், விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், விக்கிரவாண்டி தொகுதிக்கு புனித மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூா் தொகுதிக்கு ஸ்ரீவித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் அஞ்சல் வாக்கு சேவை மையங்கள் திறக்கப்பட்டன.

இந்த அஞ்சல் வாக்கு சேவை மையங்களில் காவல் துறையைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்தினா்.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி அஞ்சல் வாக்கு சேவை மையத்தில் காவல் துறையினா் தபால் வாக்குகளை செலுத்தியதை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.