விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கரோனா மெகா தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.30) கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக்.30) கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 6 முறை கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக, 7-ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 1,130 இடங்களில் சனிக்கிழமை (அக்.30) நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில் சுமாா் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மேற்கத்திய நாடுகளில் கரோனா தொற்றின் மூன்றாம் அலை விரைவாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்வதுடன், முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் தொடா்ந்து கடைப்பிடித்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...