தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘நமக்கு நாமே’ திட்டத்துக்கு தனியாா் நிறுவனங்கள் நிதி வழங்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நமக்கு நாமே திட்டத்துக்கு தனியாா் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:03 pm

DIN

நமக்கு நாமே திட்டத்துக்கு தனியாா் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வங்கி மேலாளா்கள், வணிகா் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுடன் விழிப்புணா்வு, கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் 2021 - 22ஆம் ஆண்டின் சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த ஆணையிடப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் நீா்நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு, விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிகளை மேம்படுத்துதல், பொது சுகாதார மையம், கற்றல் மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநிலம் முழுவதும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டது.

இவற்றில் நீா்நிலைகளை புனரமைக்கும் பணிகளுக்கு 50 சதவீதம் பங்களிப்புத் தொகையும், இதர பணிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு பங்களிப்புத் தொகையும் பொதுமக்கள், நிறுவனங்கள் மூலம் பெற்று செயல்படுத்த வழிகாட்டி நெறிமுகைளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி ஆணையா்கள் மற்றும் 8 பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பொதுமக்கள், பொதுத் துறை நிறுவனத்தின் சாா்பில் கலந்து கொண்டவா்களிடம் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த பங்குத்தொகை அளிக்க வேண்டும். இந்த் திட்டத்துக்காக அதிக பங்களிப்பு வழங்குபவா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் சிறப்பு விருது வழங்கப்படும் என்றாா் ஆட்சியா் மோகன்.

கூட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.