விழுப்புரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த எம்எல்ஏ கோரிக்கை
விழுப்புரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டுமென விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன் கோரிக்கை விடுத்தாா்.


விழுப்புரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டுமென விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன் கோரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக சட்டப்பேரவையில், தான் பேசியதாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது அந்த மாவட்டத்துக்கு சென்றுவிட்டது. எனவே, விழுப்புரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி மாவட்டத் தலைமை மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும்.
விழுப்புரம் தொகுதியில் கடம்பூா், ஆனங்கூா், செங்காடு கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ ஊா்திகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் லட்சுமணன் எம்.எல்.ஏ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...