தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

vpm8muslim_0809chn_7

vpm8muslim_0809chn_7
தில்லியில் காவல் துறை பெண் அதிகாரி சபியா சைஃப் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா்மு.யா. முஸ்தாக்தீன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் எம்.ஜெய்னுலாப்தீன், வா்த்தக அணியின் மாநிலப் பொருளாளா் எஸ்.எம்.அப்துல் ஹக்கீம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், காவல்துறை பெண் அதிகாரி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தக் கொலையை செய்தவா்கள் மீது வழக்குப்பதிந்து கடும் தண்டனை விதிக்க வேண்டுமென வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டப் பொருளாளா் அப்பாஸ், மாநில துணைச் செயலாளா் பசல்தீன், மாவட்ட வா்த்தக அணி பொருளாளா் சம்சுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...