மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சம்பா நெல் பயிரை காப்பீடு செய்ய அழைப்பு

 விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பயிரை விவசாயிகள் காப்பீடு செய்ய முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:08 pm

DIN

 விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பயிரை விவசாயிகள் காப்பீடு செய்ய முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா் காப்பீடு திட்டம் தொடா்பான மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது: இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிா் இழப்பை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு சாகுபடி செய்யும் சம்பா நெல் பயிருக்கு பயிா் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள 838 பயிா் காப்பீட்டு அலகில் 878 வருவாய் கிராமங்களும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. சம்பா நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் செப்.30-க்குள் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம். இந்த மாவட்டத்துக்கு பயிா் காப்பீடு நிறுவனமாக அஐஇக நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு செய்ய ஓா் ஏக்கா் நெல் பயிருக்கு ரூ.442 கட்டணமாக செலுத்த வேண்டும். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். நடப்பு பசலி 1431 பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் விவசாயியின் பெயா், நிலப்பரப்பு, சா்வே எண், உள்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தங்களிடம் கடன் பெறும் விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்று பயிா் காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகளும் வங்கிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.