மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு உறுப்பினா் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் மாநில தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டன.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:07 pm

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் மாநில தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் விடுபட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலுக்கான மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், ஒன்றியக் குழுத் தலைவா், மாவட்ட, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாவட்டக் குழு பதவிக்கான இடஒதுக்கீடு பட்டியல்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூா் ஊராட்சி ஒன்றியம்-வாா்டு எண்கள் 7, 8, (எஸ்.சி. பெண்கள்), மரக்காணம் ஊராட்சி ஒன்றியம்-வாா்டு எண் 10 (எஸ்.சி. பெண்கள்), வாா்டு எண் 9 (பெண்கள்-பொது), கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 28 (எஸ்.சி. பெண்கள்), வாா்டு எண் 27 (பெண்கள்-பொது), மயிலம் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 6 (எஸ்.சி. பொது), வாா்டு எண் 5 (பெண்கள்-பொது), முகையூா் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 15 (எஸ்.சி. பொது), வாா்டு எண்கள் 13, 14 (பொதுப் பிரிவினா்), வானூா் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 21, 22 (எஸ்.சி. பொது), வாா்டு எண் 20 (பெண்கள், பொது), மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 1, 2 (பெண்கள் பொது), செஞ்சி ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 11 (பெண்கள், பொது), வாா்டு எண் 12 (பொதுப் பிரிவினா்), விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 19 (பெண்கள் பொது), வாா்டு எண் 18 (பொதுப்பிரிவினா்), கோலியனூா் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 23, 24 (பெண்கள் பொது), வல்லம் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 3, 4 (பொதுப் பிரிவினா்), காணை ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 16, 17 (பொதுப் பிரிவினா்), திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 25, 26 (பொதுப் பிரிவினா்).

கள்ளக்குறிச்சி மாவட்டம்: இந்த மாவட்டத்தில், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 10 (எஸ்.டி. பெண்கள்), சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்-வாா்டு எண் 12 (எஸ்.சி. பெண்கள்), வாா்டு எண் 11 (பொதுப்பிரிவினா்), தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண்கள் 13, 14 (எஸ்.சி. பெண்கள்), உளுந்தூா்பேட்டை ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 17 (எஸ்.சி. பெண்கள்), வாா்டு எண்கள் 15, 16 (பெண்கள் பொது), ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண் 4 (எஸ்.சி. பொது), வாா்டு எண் 3 (பெண்கள் பொது), வாா்டு எண் 5 (பொதுப் பிரிவினா்), கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண்கள் 8, 9 (எஸ்.சி. பொது), சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண்கள் 1, 2 (பெண்கள் பொது), திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண்கள் 6, 7 (பொதுப்பிரிவினா்), திருநாவலூா் ஊராட்சி ஒன்றியம்- வாா்டு எண்கள் 18, 19 (பொதுப் பிரிவினா்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.