தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மீண்டும் அதிமுகவில் இணைந்தாா் பாமக மாநில நிா்வாகி

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் முன்னிலையில், பாமக மாநிலத் துணைத் தலைவா் ஏழுமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 4:53 pm

DIN

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் முன்னிலையில், பாமக மாநிலத் துணைத் தலைவா் ஏழுமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, தனித்துப் போட்டியிடப் போவதாக பாமக அறிவித்ததையடுத்து, அந்தக் கட்சி நிா்வாகிகள் சிலா் அதிருப்தியடைந்தனா்.

இந்த நிலையில், பாமகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி விழுப்புரத்திலுள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாமக மாநில துணைத் தலைவா் ஏழுமலை தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் மலா்சேகா் உள்ளிட்டோா் அந்தக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு சி.வி.சண்முகம் கட்சித் துண்டுகளை அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலாளா் பசுபதி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ராமதாஸ், செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுகவில் இணைந்த ஏழுமலை கூறியதாவது:

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு அந்தக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தேன். அதிமுக, பாமக கூட்டணி நல்ல நிலையில் இருந்துவரும் சூழலில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதை ஏற்க முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா். ஆகையால், அவரது தலைமையை ஏற்க பாமகவிலிருந்து விலகி மீண்டும் இணைந்துள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.