தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டிஐஜி பாதுகாப்பு வாகனம் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்

விழுப்புரத்தில் டி.ஐ.ஜி.யின் பாதுகாப்பு வாகனம் மீது மின் கம்பம் சாய்ந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:12 pm

DIN

விழுப்புரத்தில் டி.ஐ.ஜி.யின் பாதுகாப்பு வாகனம் மீது மின் கம்பம் சாய்ந்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகப் பகுதியில் தற்போது மழைநீா் வடிகால் அமைக்கும் பணி

நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை மாலை பெருந்திட்ட வளாகத்தில் டிஐஜி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, டிஐஜி அலுவலகம் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது பாதுகாப்பு வாகனமான அதிரடிப்படை வேன் மீது அங்கிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது (படம்). அப்போது அந்த வாகனத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இருப்பினும் வாகனத்தின் மேல் பகுதி சேதமடைந்தது. இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் மின் கம்பத்தை சீரமைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.