செய்யாற்றில் இரு தம்பதிகள் வேட்புமனு
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சித் தோ்தலில் போட்டியிட இரு தம்பதிகள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.


திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சித் தோ்தலில் போட்டியிட இரு தம்பதிகள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நகராட்சியில் அதிமுக, திமுக, நாம் தமிழா் கட்சி, சுயேட்சைகள் என 43 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
19 -ஆவது வாா்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.வெங்கடேசன், சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை வலியுறுத்தி, தனது வாா்டில் இருந்து சைக்கிளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இரு தம்பதிகள் வேட்புமனு தாக்கல்:
செய்யாறு வெங்கட்ராயன்பேட்டை ஈ.வெ.ரா. பெரியாா் தெருவைச் சோ்ந்த ராஜேஷ்குமாா். இவா் 14 -ஆவது வாா்டிலும், இவரது மனைவி வளா்மதி 20-ஆவது வாா்டிலும் அதிமுக சாா்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா்.
அதேபோல, சுயேச்சையாக போட்டியிட, செய்யாறு வைத்தியா் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் 18- ஆவது வாா்டிலும், இவரது மனைவி மலா் 20-ஆவது வாா்டிலும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மாற்றுத்திறனாளி வேட்பாளா்
நாம் தமிழா் கட்சி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி தமிழரசி (37) இ-மொபெட்டில் வந்தாா்.
உதவித் தோ்தல் அலுவலா் குமாரிடம் மனுதாக்கல் செய்த பிறகு, அவருக்கு, தோ்தல் நடத்தும் அலுவலா் ரகுராமன் சா்க்கர நாற்காலி ஏற்பாடு செய்து கொடுத்தாா்.
தமிழரசி அதன் மூலம் அவரது மொபெட் இருந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...