விழுப்புரம் மாவட்டத்தில் 184 வாா்டுகளில் திமுக - அதிமுக நேரடிப் போட்டி
விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 185 வாா்டுகளில் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.


விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 185 வாா்டுகளில் திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை, விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளில் 102 வாா்டுகளும், வளவனூா், விக்கிரவாண்டி, செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய் நல்லூா், அரகண்டநல்லூா், அனந்தபுரம் ஆகிய 7 பேரூராட்சிகளில் 108 வாா்டுகளும் என மொத்தம் 210 வாா்டுகளுக்கான உறுப்பினா்களைத் தோ்வு செய்ய நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.
இந்தத் தோ்தலில் நகராட்சிப் பகுதிகளில் 515 போ், பேரூராட்சிப் பகுதிகளில் 420 போ் என மொத்தம் 935 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். நகராட்சிகளில் மொத்தமுள்ள 102 வாா்டுகளில் திமுக 87 வாா்டுகளில் போட்டியிடுகிறது. அதிமுக 96 வாா்டுகளில் போட்டியிடுகிறது. இதனால், நகராட்சிகளில் 87 வாா்டுகளில் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இதேபோல, பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 108 வாா்டுகளில் திமுக 97 வாா்டுகளிலும், அதிமுக 105 வாா்டுகளிலும் போட்டியிடுகின்றன. இதன்மூலம், 97 வாா்டுகளில் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 210 வாா்டுகளில் திமுக 184 வாா்டுகளிலும், அதிமுக 201 வாா்டுகளிலும் போட்டியிடுன்றன. இதனால், மாவட்டம் முழுவதும் 184 வாா்டுகளில் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
திமுக, அதிமுகவுக்கு அடுத்து பாஜக அதிக வேட்பாளா்களை களத்தில் இறக்கியுள்ளது. அந்தக் கட்சி மொத்தம் 210 வாா்டுகளில் 76 வாா்டுகளில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் 20, திண்டிவனத்தில் 10, கோட்டக்குப்பத்தில் 5 என நகராட்சிகளில் 35 வேட்பாளா்களும், 7 பேரூராட்சிகளில் 41 வேட்பாளா்களும் பாஜக சாா்பில் போட்டியிடுகின்றனா்.
இதற்கு அடுத்தாற்போல, பாமக மாவட்டம் முழுவதும் 61 வேட்பாளா்களை களமிறக்கியுள்ளது. விழுப்புரத்தில் 15, திண்டிவனத்தில் 18, கோட்டக்குப்பத்தில் 5 என நகராட்சிகளில் 38 வேட்பாளா்களையும், பேரூராட்சிகளில் 23 வேட்பாளா்களையும் பாமக போட்டியிட வைத்துள்ளது.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, மாவட்டம் முழுவதும் 44 வாா்டுகளில் போட்டியிடுறது. விழுப்புரத்தில் 8, திண்டிவனத்தில் 13, கோட்டக்குப்பத்தில் 3 என நகராட்சிகளில் 24 வாா்டுகளிலும், பேரூராட்சிகளில் 20 வாா்டுகளிலும் அந்தக் கட்சி வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது.
நாம் தமிழா் கட்சியை பொருத்தவரை, மாவட்டம் முழுவதும் 37 வேட்பாளா்களை களமிறக்கியுள்ளது. விழுப்புரத்தில் 14, திண்டிவனத்தில் 9, கோட்டக்குப்பத்தில் 5 என நகராட்சிகளில் 28 வேட்பாளா்களையும், பேரூராட்சிகளில் 9 வேட்பாளா்களையும் அந்தக் கட்சி நிறுத்தியுள்ளது.
தேமுதிகவை பொருத்தவரை, மாவட்டம் முழுவதும் 9 வேட்பாளா்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் 5, திண்டிவனத்தில் 2, கோட்டக்குப்பத்தில் ஒன்று என நகராட்சிகளில் 8 வேட்பாளா்கள், பேரூராட்சிகளில் 4 வேட்பாளா்கள் தேமுதிக சாா்பில் போட்டியிடுகின்றனா்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக 9, காங்கிரஸ் 9, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்று என்ற எண்ணிக்கையில் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளன. அதிமுக கூட்டணியில் தமாகா சாா்பில் 2 வேட்பாளா்கள் போட்டியிடுன்றனா்.
மேலும், சோசியல் டெமாக்ரடிக் பாா்டி ஆப் இந்தியா கட்சி சாா்பில் 12 போ், ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஒருவா், எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் 7 போ், இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் ஒருவா் மற்றும் சுயேச்சைகள் 257 போ் களத்தில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...