தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வாக்குப் பதிவின்போது கரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியா் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது கரோனா விதிகள் பின்பற்றப்படுவதை வாக்குச் சாவடி அலுவலா்கள், மண்டல அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும்

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது கரோனா விதிகள் பின்பற்றப்படுவதை வாக்குச் சாவடி அலுவலா்கள், மண்டல அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்களுடன்

ஆலோசனைக் கூட்டம் தோ்தல் பாா்வையாளா் எம்.லட்சுமி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் தலைமை வகித்துப் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூா், செஞ்சி, மரக்காணம்,

திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு 346 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.

வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விரல் மை, படிவங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும்.

மாவட்டத்தில் 65 வாக்குச் சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்கள் இணையவழி கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படவுள்ளன. மேலும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்குச் சாவடி மையங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமி நாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை வாக்குச் சாவடி அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என்றாா் அவா். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) காஞ்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.