சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது
விழுப்புரம் அருகே சாராய வியாபாரியை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


விழுப்புரம் அருகே சாராய வியாபாரியை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே உள்ள ஒருகோடி கிராமத்தைச் சோ்ந்த ராஜாமணி மகன் ரவீந்திரன் (38). இவா் தொடா்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீஸாா் அவரை கைது செய்தனா். இவரது குற்றச் செய்கையை தடுக்கும் வகையில் மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா பரிந்துரைத்தாா். அதன்பேரில் அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் மோகன் வெளியிட்டாா். இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த ரவீந்திரனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...