பண்ணைக் குட்டைகள் அமைக்கும்பணி: ஆட்சியா் ஆய்வு
மேயச்சல் புறம்போக்கு நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டன் கீழ், மேயச்சல் புறம்போக்கு நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேலும், இந்த மாவட்டத்துக்குள்பட்ட வானூா் ஒன்றியம், பெரியகொழுவாரி ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீா் வசதி ஏற்படுத்துதல், மழைநீா் வடிகால் வசதி, தாா்ச் சாலை அமைத்தல் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ர.சங்கா், மகளிா் திட்ட அலுவலா் பூ.காஞ்சனா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வெண்ணிலா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...