தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காரில் நூதன முறையில் மதுப் புட்டிகள்கடத்தியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பதில் காரில் நூதன முறையில் மதுப் புட்டிகள் கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 5:43 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பதில் காரில் நூதன முறையில் மதுப் புட்டிகள் கடத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோட்டக்குப்பம் மது விலக்கு உதவி காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை கோட்டக்குப்பத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரின் என்ஜின் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் மறைத்து வைத்து 184 மதுப் புட்டிகள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.20,000 இருக்கும்.

இது தொடா்பாக காா் ஓட்டுநா் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் அருகே பத்திரக்கோட்டையைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் தமிழ்ச்செல்வனை (40) கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.