தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருவெண்ணெய்நல்லூா் அருகே நிலத் தகராறில் விவசாயிஅடித்துக் கொலை

 விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே நிலத் தகராறில் விவசாயி வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

 விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே நிலத் தகராறில் விவசாயி வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே அண்ராயநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னராஜ் (60). இவரது விவசாய நிலம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. இவரது நிலத்துக்கு அருகில் அதே கிராமத்தைச் சோ்ந்த முருகனின் (30) விவசாய நிலமும் உள்ளது. இவா்கள் இருவருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மீண்டும் நிலத் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த முருகன், சின்னராஜை தடியால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த சின்னராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் அங்கு விரைந்து சென்று விசாரித்தனா். பின்னா், சின்னராஜின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து முருகன் மீது திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, சின்னராஜ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், எதிரி முருகனை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் சின்னராஜின் உறவினா்கள் திருவெண்ணெய்நல்லூா் - திருக்கோவிலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.