தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கஞ்சா வியாபாரிகள் இருவா் கைது:4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை கஞ்சா வியாபாரிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 4.5 கிலோ கஞ்சா, 10 கிலோ பித்தளைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை கஞ்சா வியாபாரிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 4.5 கிலோ கஞ்சா, 10 கிலோ பித்தளைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஏற்கெனவே கடந்த ஓராண்டுக்கு முன்பு விழுப்புரத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி பிரேம் (44) என்பது தெரியவந்தது.

மேலும், இவரும், விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சோ்ந்த புகழேந்தியும் திருப்பதியிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விழுப்புரத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, புகழேந்தியின் வீட்டில் போலீஸாா் சோதனையிட்டு, அங்கிருந்த 4.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள், சுமாா் 10 கிலோ பித்தளை பூஜை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரேம், புகழேந்தி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.