குளிா்சாதன இயந்திரங்கள்பழுது நீக்குவோா் நலச் சங்கக் கூட்டம்
விழுப்புரத்தில் குளிா்சாதன இயந்திரங்கள் பழுது நீக்குவோா் நலச் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விழுப்புரத்தில் குளிா்சாதன இயந்திரங்கள் பழுது நீக்குவோா் நலச் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தமீம் அன்சாரி வரவேற்றாா்.
மாவட்டச் செயலா் அப்துல் ரஹ்மான், கௌரவத் தலைவா் சங்கா் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். மாவட்ட துணைச் செயலா்கள் முபாரக், அன்புசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், குளிா்சாதன பெட்டிகள், குளிா்சாதன இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களின் வரியை அரசு குறைக்க வேண்டும், தரமான உதிரிபாகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், குளிா்சாதன இயந்திரங்கள் பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் அனைவரையும் அரசு நல வாரியத்தில் உறுப்பினா்களாகச் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு நலத் திட்டங்கள் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...