மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருவெண்ணெய்நல்லூா் கிருபாபுரீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ள பழைமையான மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூரில் அமைந்துள்ள பழைமையான மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்தக் கோயில் நடு நாட்டில் பாடல்பெற்ற தலங்களில் 14-ஆவது தலமாகும். தென்பெண்ணை நதிக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் அம்பிகை வெண்ணையால் கோட்டை கட்டி வழிபட்ட சிறப்புமிக்க தலமாகும். இந்தக் கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ராஜகோபுரம் இல்லாதிருந்த நிலையில் புதிதாகக் கட்டப்பட்டது. மேலும், கோயில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 4-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. ஒவ்வொரு நாளும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

புதன்கிழமை நான்காம் கால பூஜை, யாக வேள்வி, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, பரிவார சந்நிதிகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று இரவு, நா்த்தகி நடராஜின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 6-ஆவது கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. பின்னா், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 10.45 மணியளவில் கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அா்த்தநாரி சிவாச்சாரியாா், சாம்பமூா்த்தி குருக்கள், சுந்தரமூா்த்தி குருக்கள், ஆனந்த் சிவாச்சாரியாா், அருள்நந்தி ரமணா ரமேஷ், சுரேஷ் ஆகிய சிவாச்சாரியா்கள் கோயில் கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை விழுப்புரம் இணை ஆணையா் சிவக்குமாா், கோயில் செயல் அலுவலா் சூரியநாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இரவில் பஞ்ச மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாணம், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.